மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கல்வியமைச்சின் வலைத்தளமான www.doenets.lk  இல் வெளியிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதன் காரணமாக 2020 உயர்தரப் பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.