வீடமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஆகியவற்றின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் YAPKA அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், பிரதம அமைச்சரின் பெருந்தோட்டத்திற்கான இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இ,தொ,கா வின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.