எல்லை தாண்டிய தென்கொரிய அதிகாரி வடகொரிய இராணுவத்தால் சுட்டுக்கொலை

Published By: Vishnu

24 Sep, 2020 | 05:27 PM
image

கடல் எல்லையைத் தாண்டி வடகொரிய கடற்பரப்பிற்குள் நுழைந்த தென் கொரிய அரசு ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சியோல் இராணுவ அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்களுடன் ஒரு உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அஹ்ன் யங்-ஹோ கூறுகையில், 

கடல் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் ஒரு அதிகாரி செப்டம்பர் 21 அன்று யியோன்பியோங் தீவுகளுக்கு தெற்கே 1.9 கிலோமீட்டர் (1.2 மைல்) கடற்பரப்பில் காணாமல் போனார். 

இது தெ்கொரியாவின் வடக்கிற்கும் இடையேயான கடல் எல்லையாக செயல்படும் இராணுவ கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லையாகும்.

47 வயதானவர் எவ்வாறு காணாமல்போனார் என்பது ஆரம்பத்தில் தெளிவாக கண்டறியப்படவில்லை. ரோந்து கப்பலில் அவரது காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் தென்கொரியா இராணுவம் வட கொரிய படையினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

வட கொரிய இராணுவம் அவரை சுட்டுக் கொன்றதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, எனினும் அவர்கள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வட கொரிய இராணுவத்தினருக்கு "சுட்டுக் கொல்லும் உத்தரவு" வழங்கப்பட்டதாக தென் கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளபதி இம் மாத தொடக்கத்தில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47