திக்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்திலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 83 வயதான வயோதிப பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் காணப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த குழியிலிருந்து மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் மற்றம் சிறிய குப்பி விளக்கு ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறுதலாக தீப்பற்றி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.