இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடமிருந்து மேலும் 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு சட்டமா அதிபரினால் கோரப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தமாக 440 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு குறித்த கப்பலின் உரிமையாளர்களிடம் இதுவரை கோரப்பட்டுள்ளது.

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, கடற்படை, விமானப் படை உள்ளிட்ட அனைத்து பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு, மீட்பு, பராமரிப்பு செலவுக்காக ரூபா 340 மில்லியனை நஷ்டஈடாக செலுத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, கடந்த வாரம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.

குறித்த கப்பல் உரிமை நிறுவன சட்டத்தரணிகளுக்கு அவர் இக்கோரிக்கையை கடந்த 16 ஆம் திகதி முன்வைத்திருந்தார்.

இந் நிலையில் தீ கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 340 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜயரத்ன இன்று அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது மேலும் 100 மில்லியன் ரூபாவுக்கான நஷ்டஈட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.