நாட்டில் மேலும் 13பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,142 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரையில்  3,324 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் இருந்து 7 பேரும் , வெலிகந்த வைத்தியசாலை மற்றும் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் இருந்து இருவரும் , ஈரானவிலா வைத்தியாசலையில் இருந்த 4 பேருமே இவ்வாறு கொரேனா தொற்றில் இருந்து பூரணகுணமாகி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்தோடு நாட்டில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களில் மேலும் 169 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சைகள் பெற்று வருவேதாடு ,நாட்டில்  கொரோனா வைரஸினால் பாதிப்க்கப்பட்டு இதுவரையில் 13  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.