இதுவரை சீனாவின் முதலாவது பணக்காரராக விளங்கிய அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மாவின் இடத்தை, குடிநீர்  போத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான சோங் சான் சான் பிடித்துள்ளார்.

புளூம்பொர்க் நிறுவனம் அன்மையில் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்களின் தரப்படுத்தலில், இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, 4 லட்சத்து 33 ஆயிரத்து 973 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள சீன சோங் சான் உலக பணக்காரர்கள் பட்டியலில் 17ஆவது இடத்தையும், ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தையும் பிடித்துள்ளார்.

இதனையடுத்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 187 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஜாக் மா சீனாவின் இரண்டாவது பணக்காகராக பின் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.