வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் வெடிக்காதநிலையில் காணப்பட்ட மோட்டார் செல் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் தோட்டவேலையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிபொருள் இருப்பது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருளை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்க செய்யவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.