ஆலயத்திற்கு வருகைதருவோரை பதிவுசெய்யும் பொலிஸார்

Published By: Digital Desk 4

24 Sep, 2020 | 03:57 PM
image

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் அச்சமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறித்த பதிவு நடவடிக்கை கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதுடன், பொதுமக்கள் அச்ச மனநிலையுடன் வழிபாடுகளில் ஈடுபட வேண்டியுள்ளதாக நிர்வாகத்தினர் விசனம் தெரிவிக்கின்றனர்.

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடத்துவதற்கு நெடுங்கேணி பொலிசாரால் தடை கோரப்பட்ட நிலையில் அதனை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

எனினும் பொலிசார் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்காத நிலையில் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31