இன்றைய திகதியில் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஒன்லைன் மூலமாக கல்வி கற்றல் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவ மாணவியர்களும், பதின்ம வயதுடையவர்களும், கல்லூரி மாணவ மாணவியர்களிடமும் இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. 

இவர்கள்  ஓன்லைன் மூலம் கல்வி கற்கும் தருணங்களை தவிர்த்து, ஏனைய தருணங்களில் 'வீடியோ கேமிங்: என்ற விளையாட்டிற்கு அடிமையாகி, அதன் காரணமாக மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கு தற்போது cognitive behaviour therapy என்ற சிகிச்சையின் புதிய வடிவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களை மன அழுத்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கிறார்கள்.

பொதுவாக இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பேரச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலத்திரனியல் சாதனங்களுடன் நிறைய மணித்தியாலங்களை செலவிடுகிறார்கள். நாளடைவில் இத்தகைய பயன்பாட்டிற்கு அவர்களை அறியாமலே அவர்கள் அடிமையாகிறார்கள். 

இதன் காரணமாக அவர்களின் மூளையில் இயல்பாக சுரக்கும் செரடோனின் எனும் வேதிப்பொருள் சுரப்பதில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.

மனநல மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சையில் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மகிழ்ச்சியான தருணங்களை  நினைவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். 

அதற்குரிய பயிற்சியையும் வழங்குகிறார்கள். இருப்பினும் மன அழுத்தம் என்ற பாதிப்பு வராமல் தடுக்க வேண்டும் என்றால், எம்மை நாமே ஏதேனும் ஒரு வழியில் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

டொக்டர் யாமினி கண்ணப்பன்.

தொகுப்பு அனுஷா.