தொலைக்காட்சித் தொகுப்பாளினியும், நடிகையுமான அர்ச்சனா பிக் பொஸ் சீசன் 4 இல் போட்டியாளராக பங்குபற்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பார்வையாளர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய மாற்றங்களுடன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருக்கிறார். 

அடுத்த மாதம் நான்காம் திகதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக மூத்த இயக்குனர் அனுமோகன், நடிகர்கள் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், நடிகைகள் ரம்யா பாண்டியன், சிவானி நாராயண், சஞ்சனா சிங் ஆகியோர் பங்குபற்றவிருப்பதாகவும், இவர்கள் தற்போது தங்களை நட்சத்திர ஹொட்டேல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

இந்நிலையில் போட்டியாளர்களில் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான அர்ச்சனாவும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

12 போட்டியாளர்கள் பங்குபற்றவிருக்கும் இந்த நிகழ்வில் யார் அதிகாரப்பூர்வமாக பங்கு பெறுகிறார்கள் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்திற்கு சற்று முன்னர் இறுதி செய்யப்படும் என்று பிக் பொஸ் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.