மாஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தினை அண்மித்த வீதியில் புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில், குரஹன்ஹேனேகம -நாகொல்லாகம பகுதியில் வசிக்கும் 18 வயதான இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.