கொரோனா தொற்றுக்குள்ளான, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண், சமூக வலைதளத்தில் நேற்று பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அப்பாவின் உடல் நிலை சீராக இருப்பதுடன், நல்ல முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறது. அவருக்கு, 'எக்மோ' மற்றும், 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

'பிசியோதெரபி'யும் அளிக்கப்பட்டு வருகிறது. திரவ உணவு எடுத்துக் கொள்கிறார் என்றும் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.