கலப்பு தேர்தல் முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் திட்டம் - தினேஷ் கோரிக்கை

24 Sep, 2020 | 11:23 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்ற தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும். அதன் மூலமே மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் தொடர்புகள் அதிகரிக்கும். இதனை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் செயற்திட்ட அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணைக்குழு கொவிட் 19 அச்சுறுத்தலான காலப்பகுதியில் மிகவும் சவால்களுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியமைக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினர் தனித்து சுயாதீனமாக செயற்பட்டமை, அந்த ஆணைக்குழுவின் கெளரவத்தை பாதுகாக்கும் வழியல்ல. அதனால் பாரிய விமர்சனத்துக்கும் தேர்தல் ஆணைக்குழு ஆளாகியும் இருக்கின்றது.

மேலும் தேர்தல் ஒன்றில் நிதி செலவழிப்பது தொடர்பிலான வழிகாட்டலில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுதொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் போயுள்ளது. அண்மைக்கால தேர்தல்களின் போது கோடிக்காணக்கான பணம் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. சர்வஜன வாக்குரிமைக்கும் அது ஒருவகையில் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை முடியாமல் பாேயிருக்கின்றது.

அத்துடன் பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் முறையை ஏற்படுத்தவேண்டும். அதேபோன்று வாக்கு எண்ணும்போதும் பிரதேச மட்டத்தில் வாக்குகளை எண்ணி, பெறுபேற்றை அறிவிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவேண்டும். 

எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமுல்படுத்தியுள்ள விகிதாசார மற்றும் தொகுதி அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறையை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படுத்துவதே எமது திட்டமாகும். அதன் மூலமே பொது மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் அதிகரிக்கும். அதனால் இந்த தேர்தல் முறையை பாராளுமன்ற தேர்தலில் ஏற்படுத்திக்கொள்ள இணைந்து செயற்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02