வெளிநாட்டில் பதுங்கியிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குடு லால் மற்றும் பூகுடு கண்ணா வின் உதவியாளரான “உதயா” என்பவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த நபர் மோதர -  பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யபட்டுள்ளார்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.