"தேயிலை சாயம்" புகைப்படக் கண்காட்சி இம்மாதம் 26/27 ஆம் திகதிகளில் கொழும்பு "லயனல் வென்ட்" கலைக்கூடத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையில் இடம்பெறவுள்ளது.

மலையக தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்பில் 40  மலையக இளைஞர்,  யுவதிகளால் இக்கண்காட்சிக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாவதுடன் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பில் ஓர் ஆழமான சமூக கலந்துரையாடலை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கண்காட்சி இடம்பெறும் இரண்டு தினங்களிலும் மாலை 4.00 மணியளவில் இப் புகைப்படங்களினூடாக மலையக தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்ப்பதுடன்,  இப்புகைப்பட கண்காட்சியினை பார்வையிடுவதற்கும்,  மாலையில் நடைபெறும் கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த புகைப்படக் கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எம். பிரதீபன் 0773697420 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.