(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின் பெயர்களை தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவி தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பில் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
1990 இல் வடக்கில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிங்கள் புத்தளம்,குருணாகல்,அநுராதபுரம் போன்ற பகுதிகளில் குடியேறினார்கள். இதில் 50 வீதமானவர்கள் மீள் குடியேறினார்கள். 20-30 வீதமானவர்கள் புத்தளத்தில் நிரந்தரமாக குடியேறிதோடு 20 வீதமானவர்கள் அதாவது சுமார் 10ஆயிரம் வாக்காளர்கள் அங்கும் இங்கும் அழைந்து திரிந்தார்கள். மன்னார்,முல்லைதீவு பகுதிகளில் வீடுகள் இருந்தாலும் தொழில்,சுகாதாரம். பிள்ளைகளில் கல்வி என்பவற்றுக்காக புத்தளத்தில் தங்கினார்கள்.
இவ்வாறானவர்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளத்தில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் உதவி தேர்தல் ஆணையாளர் இவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து அகற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.
தேர்தல் காரியாலயத்துக்கு சென்று இது பற்றி முறையிட்டுள்ளோம். மக்களின் வாக்குரிமையை பறிப்பது குறித்து அறிவித்துள்ளோம்.போராசிரியர் ஹூலை இங்கு விமர்சித்தார்கள். அவர் நேர்மையான அதிகாரி என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.
மேலும் சட்டத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வதிவிடம் உள்ள வாக்காளர்களுக்கு தமது வதிவிடத்தை பதியும் உரிமை அவர்களுக்கே உள்ளது.இரு மாவட்டங்களில் வாக்காளர் பதிந்திருந்தால் ஆணைக்குழுவிற்கே அது தொடர்பில் முடிவு செய்ய முடியும்.ஆனால் இந்த மக்கள் ஒரு இடத்தில் மாத்திரம் பதிந்துள்ள நிலையில் அதனை தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளது.மக்களின் வாக்குரிமையுடன் விளையாடக் கூடாது.
எனவே வடக்கிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் சொத்துக்களை அழித்தது போன்று அவர்களின் வாக்குரிமையை அழித்துவிடக்கூடாது. அதற்கு இடமமளிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM