உலக நாடுகளை ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா வைரஸ், தமிழ் சினிமாவில் பல பிரபலங்களையும் ஆட்கொண்டுள்ளது.  அந்த வரிசையில், நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்செய்தி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.