நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 'ரத்மலானே ரொஹா' என்று அழைக்கப்படும்  தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா என்பவர் ஆவர்.

குறித்த நபர் நேற்றிரவு கொச்சிக்கடை பகுதியில் படகொன்றில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல‍ முயன்றுள்ளார். 

இதன்போது அவரை கைதுசெய்ய பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து டி -56 ரக துப்பாக்கி ஒன்றையும், பிஸ்டல் ஒன்றையும், மூன்று இலட்சம் இந்திய ரூபாவினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்புடையவர் ஆவார்.