போதைப்பொருள் மோடி மூலம் ஈட்டிய 31 மில்லியன் ரூபாவினை வங்கிக் கணக்ககுகளில் சேமித்து வைத்து வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில‍ை நீர்கொழும்பு மாநாகராட்சி மன்ற ஊழியர்களும் வாகன உதிரிப்பாக விற்பனை தொழில் அதிபர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில் நீர்கொழும்பு மநாகராட்சி மன்ற ஊழியரின் வங்கிக் கணக்கில் 18 மில்லியன் ரூபாவும், தொழிலதிபரின் கணக்கில் 5 மில்லியன் ரூபாவும் மற்றைய நபரின் வங்கிக் கணக்கில் 8 மில்லியன் ரூபாவும் உள்ளமை தெரியவந்துள்ளது.

மிகக் குறுகிய காலத்திற்குள் அதிக பணத் தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், பெரும்பான்மையான நிதி இணையத்தளமூலமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை பகுதியில் கடந்த மே 22 ஆம் திகதி 9.5 கிராம் ஹெரோயினுடன் கைதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்று அவர்கள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவும் உள்ளர்.