ஐ.பி.எல். தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் கம்பீரமான ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி 195 ஓட்டங்களை குவித்துள்ளது.
13 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டி சார்ஜாவில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மும்பைக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு சரிந்தது. டீகொக் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சூரியகுமார் யாதவ்வுடன் கைகோர்த்த ரோகித் சர்மா அதிரடி காட்டிவர மும்பை அணி 10 ஓவர்களுக்கு 94 ஓட்டங்களை குவித்தது.
ரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் தலா 45 ஓட்டங்களுடன் அதிரடிக் காட்டி வந்தனர்.
10.5 ஆவது ஓவரில் சூரிய குமார் யாதவ் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய டிவாரி 13 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப பாண்டிய களமிறங்கி அதிரடி காட்ட ஆரம்பித்தார்.
இந் நிலையில் ரோகித் சர்மா 54 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பாண்டியா 18 ஓட்டங்களுடன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பொல்லார்ட் 13 ஓட்டங்களுடனும், குருனல் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் சிவம் மாவி 2 விக்கெட்டுக்களையும், சுனில் நரேன் மற்றும் ரஸல்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றின்.
Photo Credit: IPL
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM