பண்டாரவளை நகரில் சென்ஜோசப் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தொகுதியில் இன்று மாலை 4.15 அளவில் தீ பரவல் ஏற்றபட்டது 

இதன்போது குறித்த தீ விபத்தில்  கெமிகெதர உணவகம் முற்றாக தீக்கிரையானது. 

இதையடுத்து தீயை கட்டுபாட்டுக்கு கொண்டு வருவதற்காக பண்டாரவளை நகரசபை தீயனைப்பு அதிகாரிகளும் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்  

இந்நிலையில் பண்டாரவளை பொலிசார் குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்