(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் 85ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளே இருக்கின்றனர்.  அவர்களில் 38ஆயிரம்பேர் மக்கள் பிரதிநிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். 

மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது மக்கள் தொடர்பில் நம்பிக்கை இருக்கவேண்டும். அவ்வாறு நம்பிக்கை இல்லாதவர்களே பொலிஸ் பாதுகாப்பு கோறுகின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் உறுப்பினர்களின் கோப்புகளை தூக்கிச்செல்லவா பொலிஸ் பாதுகாப்பு கோறுகின்றனர் என கேட்கின்றேன்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பாதுகாப்பு வழங்க நாங்கள் தயார். ஆனால்  உறுப்பினர்களின் கோப்புக்களை தூக்கிச்செல்ல பொலிஸார் வழங்க முடியாது. அதற்கு தரவும் மாட்டோம் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண, எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டிருப்பது எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.  

அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.