எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது என ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


ஐ.நா. பொது சபையின் 75ஆவது ஆண்டு தினத்தினை முன்னிட்டு இணையவழியாக நடைபெறும் பொதுசபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


உலகில் மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது.


அமைதி, வெளிப்படை தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை.


 விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை.


எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை.


மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் விவாதங்களை பேச்சுவார்த்தை வழியே சுமூக தீர்வு காணும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்’’ என கூறியுள்ளார்.