(எம்.மனோசித்ரா)

கொழும்பில் வீதி ஒழுங்குகளை மீறிய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு சனிக்கிழமை ஆலோசனை வகுப்புக்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

வீதியின் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில் அரச மற்றும் தனியார் பயணிகள் பேரூந்து, பாடசாலை மற்றும் அலுவலக பஸ் மற்றும் வேன் என்பவை பயணிக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட  ஏற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

இந்த வீதி ஒழுங்குகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து அவதானிப்பதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் வீதியில் இருமறுங்கிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 6 மணிமுதல் 9 மணி வரையும் மாலை 6 மணிமுதல் 9 மணிவரையும் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் வீதி ஒழுங்குசட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி ஒழுங்கு முறைகளில் சிறு சிறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

எவ்வாறிருப்பினும் இன்று புதன்கிழமை காலை பத்தரமுல்ல வீதியில் பாரிய வாகன நெறிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.