வாய்மூல விடைக்கான வினாக்களில் தமக்கு 50 வீதம் வேண்டும் பாராளுமன்றில் போர்க்கொடி தூக்கியதால்  வாதப்பிரதிவாதம் 

23 Sep, 2020 | 05:24 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற அமர்வுகளின் போது வாய்மூல விடைக்கான வினாக்களில் தமக்கு 50 வீத ஒதுக்கீடு வேண்டுமென அரச தரப்பு எம்.பிக்கள் சபையில் தெரிவித்தவேளையில், தெரிவுக்குழுக்களின் தலைமைப் பதவிகளில் தமக்கு 50 வீதம் வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களும் போர்க்கொடி தூக்கியதால் சபையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

இதனையடுத்து, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணத்தைத்தொடர்ந்து வாய் மூல விடைக்கான வினா நேரம் ஆரம்பமானது. 

இதில் முதலாவது கேள்வியை எழுப்புமாறு ஒழுங்குப்பத்திரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹேஷான் விதானகேவிற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

இதன்போது, அரச தரப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.யான மொஹமட் முஸம்மில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி வாய் மூல விடைக்கான வினாக்களாக 15 வினாக்களுக்கு தினமும் அனுமதியளிக்கப்படுகின்றது.

இன்று அனுமதிக்கப்பட்ட 15 வினாக்களில் 13 வினாக்கள் எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள் மட்டுமே அரச தரப்பு எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

எதிர்க்கட்சியை சேர்ந்த ஹேஷான்,சமிந்த எம்.பி.க்களுக்கு இரு தடவைகள் கூட கேள்வி கேட்க இடமளிக்கப்பட்டுள்ளது.

எனவே இது அநீதி. நாமும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

எனவே, வாய் மூல விடைக்கான வினாக்களில் எமக்கு 50 வீத உரிமை வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். வாய் மூல விடைக்கான வினாக்களில் எதிர்க்கட்சியினருக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். 

அப்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான புத்திக பத்திரன, அந்த உறுப்பினர் கேட்பது நியாயம். அரச தரப்பு எம்.பி.க்களுக்கு வினாக்களில் 50 வீதத்தைக்கொடுப்போம்.

ஆனால் அதேபோன்று அவர்கள் தெரிவுக்குழுக்களின் தலைமைப்பதவிகளில் எதிர்க்கட்சியாகிய எமக்கு 50 வீதத்தை தர வேண்டும். 

தற்போது கோப் தலைமைப்பதவியை அவர்கள் பெற்று விட்டனர். எனவே கோபா தலைமைப்பதவியை எமக்குத் தர வேண்டும் என்றார்.

இதனையடுத்து இரு தரப்பினரும் சிறிது நேரம் மாறி மாறி ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பி கடும் வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இதற்குப்பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உறுப்பினர்களினால் கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கின் அடிப்படையிலேயே ஒழுங்குப்பத்திரத்தில் அவை உள்ளடக்கப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42
news-image

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2025-03-26 15:01:21
news-image

மோட்டார் சைக்கிள் - பாரஊர்தி மோதி...

2025-03-26 14:32:17
news-image

ஊடக மாற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பாளியாக இருக்க...

2025-03-26 14:08:21
news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17