ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் முதல் முறையாக இணைய வழியாக நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவும் சீனாவும் பகிரங்கமாக மோதிக்கொண்டன.


உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே பொறுப்புக்கூற வேண்டும் என அமெரிக்கா குற்றம் சுமத்தியது.


இதற்கு பதிலளித்த சீன ஜனாதிபதி ஜின்பிங், ஐ.நா வரை டிரம்ப் தமது அரசியல் வைரஸை பரப்புகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளுடன் இணைந்து சீனா அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.


உலக நடப்புகளில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும், பிற நாடுகளை கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்றும் அமெரிக்காவை ஜின்பிங்  சாடினார்.


இந்நிலையில் அமெரிக்கா-சீனா இடையிலான வார்த்தைப் போர் புதிய பனிப்போருக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.