கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், தனிமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுவனின் செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Heartbroken mother Tracey Tyler (left) has spoken out after she found 14-year-old son Sam (right) hanged in his bedroom. Tracey believes Sam took his own life because he was feeling isolated during the nationwide lockdown imposed to tackle coronavirus earlier this year

கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில், பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவிற்கான சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையொன்றில் பணிபுரியும்  தாய் ஒருவர் தமது மகனை வீட்டில் தனிமையில் விட்டுச்சென்றுள்ளார். 

இதன் போது வீட்டில் தனிமையிலிருந்த குறித்த, 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Sam, pictured with brothers Nathan, 11, and Daniel, 9, was described as having a 'heart of gold'

நண்பர்களுடன் விளையாடுவதையும் வெளியில் செல்வதையும் விரும்பும் குறித்த சிறுவன், கடந்த நான்கு மாதமாக நாடு முடக்கப்பட்டதன் காரணமாக மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், இந்த தனிமை காரணமாக அவர் தூக்கிட்டு கொண்டுள்ளதாகவும் அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

Flowers and tributes laid at Sam Tyler's grave after his mother says he took his own life in May

அத்துடன், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் தனது மகன் இன்னும் உயிருடன் இருந்திருப்பார் என அவரின் தாயார் மனம் உருகி உள்ளார்.