நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான வெளிநாட்டவர் ஒருவர் உள்பட 11 பேர்  தொற்றில் இருந்து குணமடைந்து தனது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  3,129 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவில் இருந்து ஒரு வெளிநாட்டவரும் , தேசிய தொற்றுநோயியல் நிலையத்திலிருந்து 7 பேரும் வெலிகந்த நிலையத்தில் இருந்த ஒருவரும் , ஈரானாவிலா வைத்தியசாலையில் இருந்து ஒருவருமே இவ்வாறு குணமாகியுள்ளனர்

அத்தோடு நாட்டில் உள்ள ஐந்து வைத்தியசாலையில் 10 வெளிநாட்டவர் உள்பட 171 பேர் கொரோனா வைரஸிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.

எனினும் 52 கொரேனா வைரஸ் சந்தேகத்திற்குரிய நபர்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றஅதேவேளை நேற்றைய தினம் நாட்டில் புதிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட் நபர்களின் மொத்த எண்ணிக்கை  3,313 ஆக உயர்ந்துள்ளதோடு , கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.