திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (15) வீசிய கடும் காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், ஏனைய வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை கிண்ணியா பிரதேச செயலகம்  சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.