இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் தெற்கு இஸ்ரேலின் அஷ்கெலோன் மற்றும் அஷ்டோட் பகுதிகளை நோக்கியே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுடன் இயல்பாக்க ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த 13 பேரும் அஷ்டோடில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார், நால்வர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர், மேலும் எட்டுப் பேர் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளின் மூலோபாய மறுசீரமைப்பில் இஸ்ரேலுடனான உறவை சீராக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாலஸ்தீன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.