அடுத்தடுத்து வெடிப்பினால் அதிர்ந்து போன லெபனான் ; பெய்ரூட் அருகே மீண்டும் வெடிப்பு

By Vishnu

23 Sep, 2020 | 11:27 AM
image

லெபனானின் தெற்கு பகுதியில் ஈரான் ஆதரவுடைய ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்கு செவ்வாயன்று வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் பெய்ரூட்டை உலுக்கிய சக்திவாய்ந்த வெடிப்பினையடுத்து பதிவாகியுள்ள இந்த சம்பவமானது லெபனான் முழுவதும் மீண்டும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாயன்று தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ (30 மைல்) தொலைவில் உள்ள தெற்கு கிராமமான இன் கானாவில் அமைந்துள்ள கட்டிடமொன்றிலேயே இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் ஊடக அலுவலகம் அல் ஜசீரா செய்திச் சேவையிடம், ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தொழில்நுட்பப் கோளாறினால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற இடத்தை சுற்றி ஹஸ்புல்லா அமைப்பினர் பாதுகாப்பு வளைவை அமைத்தமையினால் ஊடகவியலாளர்கள் அப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மேலுமொர் பாதுகாப்பு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரூட் துறைமுகத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்து ஏழு வாரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 3,000 டன் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் முன்னதாக பதிவான வெடிப்புக்கு காரணமாக அமைந்தது.

இந்த வெடிப்பில் தலைநகர் பெய்ரூட்டில் சுமாரம் 200 பேர் கொல்லப்பட்டனர், 6,500 பேர் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை சேதமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் குறித்து வதந்திகளை பரப்பியமைக்காக சீனாவில்...

2022-09-25 12:05:01
news-image

தாய்வான் தொடர்பான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை...

2022-09-25 11:39:18
news-image

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த...

2022-09-25 11:13:42
news-image

என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து பாஜகவினர் வீடுகளில்...

2022-09-25 11:07:45
news-image

சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? -...

2022-09-25 10:23:23
news-image

இந்திய தளவாடக் கொள்கை நாட்டின் வளர்ச்சியை...

2022-09-24 11:04:44
news-image

சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77...

2022-09-24 12:29:55
news-image

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர்...

2022-09-23 20:39:13
news-image

சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை-திபெத் மக்களிற்கு...

2022-09-23 15:37:57
news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-24 07:36:08
news-image

பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக...

2022-09-23 15:06:00
news-image

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க...

2022-09-23 13:03:27