பமுனுகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பில் 6630 லீற்றர் சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பமுனுகம - முத்துராஜவெல பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படும் 6630 லீற்றர் கோடா அடங்கிய 34 பீப்பாய்கள் மற்றும் சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போபிட்டிய - பமுனுகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முனன்னெடுத்து வருகின்றனர்.