கிளிநொச்சி கோணாவில் கிழக்குப் பகுதியில் குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிததுள்ளனர்

கிளிநொச்சி கோணாவில் கிழக்குப்பகுதியில் தற்போதும் குடிநீருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது.

இப்பகுதியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், போதிய குடிநீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணப்படுகின்ற பொதுக்கிணறுகள் மற்றும் ஏனைய கிணறுகளில் நீர் வற்றிக்காணப்படுகின்றது. இதனைவிட இந்தப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட குழாய்கிணறுகளும் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதனால் இங்குள்ள மக்கள் தமக்கான குடிநீரையும் இதர தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக இங்கிருந்து தண்ணீரைப்பெறுவதற்கு மிக நீண்டதூரம் அயல் கிராமங்களுக்குச் செல்ல வேண்டியதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்;ளனர்.

 ஆகவே பழுதடைந்த கிணறுகளை புனரமைத்துத் தருமாறும் தற்போது வழங்குகின்ற குடிநீரை அதிகரித்துத்தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஏனைய  அரச அமைப்புக்களாலும் இந்தப் பிரதேசத்தின் தேவைகள் கருதி அமைக்கப்பட்ட கிணறுகள் அனைத்துமே நீர் இன்றிக்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.