(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது.

அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது.

இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அண்மைய நாட்களில் வைத்திய ஆலோசனைகளின் பிரகாரம் இரா.சம்பந்தன் போதிய ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் பல்வேறு சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் தொடர்ச்சியாக இரத்துச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.