அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில்  நிலத்தில் மறைத்து  வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து  தயாரிப்பு சொட்கண்  ரக துப்பாக்கியொன்று மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி இன்று (22) காலை   சம்மாந்துறை  விசேட அதிரடிப்படை  முகாம்   பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி இந்த துப்பாக்கியை மீட்டுள்ளனர். 

குறித்த இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி சம்மாந்துறை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது