இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இந்த வெடிபொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில். அவை தொடர்பில் ஆராயப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருட்களே பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக  பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் நாளை குறித்த வெடிபொருட்கள் மீட்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.