பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோரின் பிறப்பு உறுப்பை அகற்ற நைஜீரியா அதிரடி தீர்மானம்

22 Sep, 2020 | 06:20 PM
image

கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளமையால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது.


புதிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல்  துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.


குழந்தைகளை  துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகப்பட்டசமாக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதே நைஜீரியாவில் வழமையாக இருந்து வந்து.


இந்நிலையிலேயே இந்த சட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right