ரஷ்யாவின் ட்வெர் பிராந்தியத்தில் Su-30 என்ற போர் விமானமானது விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந் நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் முதற்கட்ட தகவல்களின்படி, பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேற்படி விமானமானது ட்வெர் பிராந்தியத்தின் காடுகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினையடுத்து அதில் பயணித்த வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்களது உயிருக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணைகளை மேற்கொள்ள இராணுவத்தினர் விசாரணைக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.