13 ஆவது ஐ.பி.எல் : இன்றைய ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் மோதல்

Published By: Vishnu

22 Sep, 2020 | 04:21 PM
image

13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளது.

இப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று மாலை சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று முறை சாம்பியனான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. 

இப் போட்டியில்  காயம் காரணமாக களமிறங்காத வெய்ன் பிராவோ இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறெனினும் முதல் ஆட்டத்தில் வெற்றியை ருசித்த களிப்புடன் இன்றைய போட்டியில் சென்னை களமிறங்கவுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவரான ஸ்டீவன் சுமித் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தலையில் தாக்கியதால் அந்த தொடரில் விளையாடவில்லை. 

அதன் தாக்கம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. ஆனால் ஸ்டீவன் சுமித் முழு உடல் தகுதியை எட்டி விட்டதால் ஐ.பி.எல். போட்டியில் தொடக்கம் முதலே விளையாடுவார் என்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

அதேநேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து வருவதால் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் முதல் கட்ட ஆட்டங்களில் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும். 

குடும்பத்தினருடன் வருகை தந்து இருப்பதால் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு இருக்கும் ஜோஸ் பட்லர் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது. 

எனினும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். 

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான எமீரக ஆடுகளத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிப்பது ராஜஸ்தான் அணிக்கு சற்று கடினமாகவே இருக்கும். 

எனினும் இரு அணியிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை மொத்தமாக 22 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளன. அதில் சென்னை அணி 14 வெற்றிகளையும், ராஜஸ்தான் அணி 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் தோனி 68 ஓட்டங்களை குவித்தார், ஐ.பி.எல். வரலாற்றில் அவர் மொத்தமாக 4,500 ஓட்டங்களை பூர்த்தி செய்வார். 

அதேபோல் ரோபின் உத்தப்பா இப் போட்டியில் அரைசதம் ஒன்றை விளாசினால் ஐ.பி.எல்.லில் தனது 25 அரைசதத்தை பதிவுசெய்வார்.

டேவிட் மில்லரும் இன்றைய ஆட்டத்தில் ஒரு பிடியெடுப்பனை மேற்கொண்டால் அது ஐ.பி.எல்.லில் அவரது 50 ஆவது பிடியெடுப்பாக அமையும்.

ஐ.பி.எல்.லில ஆயிரம் ஓட்டங்களை பூர்த்தி செய்த வோட்சனுக்கு 43 ஓட்டங்களும், ராயுடுவுக்கு 45 ஓட்டங்களும் தேவை என்ற நிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58