தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ‍இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.