20 ஆம் திருத்தத்திற்கு எதிராக பாராளுமன்றில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி அமர்விற்கு வருகை தந்ததோடு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மார்பில் "வினாஷகாரி 20 எபா" (நாசத்தை ஏற்படுத்தும் 20 வேண்டாம்) என்ற சிங்கள வாக்கியம் தாங்கிய சின்னத்தையும் தாங்கியிருந்தனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளதோடு தனது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.