தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய  இலங்கை பொலிஸாரிடம் சிபிசிஐடியினர் விசாரணை

22 Sep, 2020 | 02:59 PM
image

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய  இலங்கை போலீசாரை நீதிமன்றக் காவலில் எடுத்த சிபிசிஐடியினர் தனுஷ்கோடியில் வைத்து விசாரணை நடத்தினர்.


இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் கடந்த செப்டெம்பர் 5ம் திகதி பைபர் படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பி வந்தவரை மண்டபம் கடலோர பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில், சிங்களவரான அவர் இலங்கை மொனாராகல மாவட்டம் சியம்பலன்டுவா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் பண்டாரா (30) என்பதும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றியதும் தெரிய வந்தது. மெரைன் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து இலங்கை போலீசாரால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ  ஹெரோயின் போதைப்பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் காவலர் பிரதீப் குமார் பண்டாராவின் சகோதரர் என இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், தன்னையும் கைது செய்துவிடுவார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்ததாக தெரிவித்தார்.


பிரதீப்குமார் பண்டாராவுக்கும் கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கோட லொக்காவுக்கும் போதை பொருள் விற்பனையில் தொடர்பு உள்தாக கூறப்பட்டதால் இந்த வழக்கை தமிழக டிஜிபி கடந்த 7-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார். 


இந்நிலையில் கோவை மண்டல சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் பிரதீப் குமார் பண்டாராவை அழைத்து வந்து போலீஸ் வாகனத்தை விட்டு இறக்காமல் கடந்த 5 ந்தேதி இரவு என்ன நடந்தது, பிரதீப்குமாரை முதலில் யார் பார்தது, பாக் ஜல சந்தி கடல் வழியாக போதைபொருட்கள் சட்ட விரோத அந்நிய ஊடுருவல் குறித்து அப்பகுதி மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27