பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதாவுல்லா குறித்த கோரிக்கையை மறுத்த நிலையில் பாராளுமன்ற படைக்கல சேவிதர்களிடம் எதிர்க்கட்சியினர் அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து சிறு நேரத்தில் அதாவுல்லா அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.