நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,118 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரையில்  3,299 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 168 பேர் கொரோனா வைரஸிற்கு சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.