தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

35 வயதான மேற்படி நபர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையை அடுத்து குறித்த நபரின்  சடலத்தை இலங்கைக்குக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார்.