கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு இந்த மாத இறுதிக்குள் இலங்கை வரவுள்ளார்.

13 வருடங்களுக்கு பின்னர்  முதலாவது தடவையாக  கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் வருகையின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை  ஸ்டீபன் டியோன்  யாழ்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதோடு, வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர் மற்றும் சிவில் சமுக உறுப்பினர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.