இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முதல் காணொளியூடான உச்சி மாநாட்டில் கலந்துரையாடவுள்ளார்.

இச் சந்திப்பு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தமது இந்திய விஜயத்தின் போது,  மூன்று வரு­டங்­க­ளுக்கு கடன் மீள செலுத்­து­கையை முடக்கி வைப்­ப­தற்கு மஹிந்த ராஜபக்ஷ விடுத்­த  வேண்­டு­கோள் குறித்தும் நாணய மாற்று வீதம் குறித்து இந்த உச்சி மாநாட்டில்  கலந்துரையாடப்படவுள்ளது. 

Prime Minister Narendra Modi shakes hands with Sri Lanka's Prime Minister Mahinda Rajapaksa in New Delhi. File Photo.

இச் சந்திப்பு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.

செப்டெம்பர் 24 ஆம் திகதி  இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள காணொளியூடான சந்திப்பினை தொடர்ந்து 26 ஆம் திகதி இரு நாடுகளுக்குமிடையிலான இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பெப்ரவரியில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துக்கொண்டதையடுத்து, உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ள காணொளி மாநாடு இதுவாகும். இதற்கிடையே உத்தியோகபூர்வமாக இருமுறை தொலைபேசி உரையாடல் மூலம் கலந்துரையாடியுள்ளனர்.