யானைகளின் மர்ம மரணத்திற்கான காரணம் வெளியானது

Published By: Digital Desk 3

22 Sep, 2020 | 10:47 AM
image

தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில் யானைகள் இறந்ததற்கு, நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை பருகியதே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

யானைகளின் மர்மமான முறையில் மரணமடைந்தமையால் அதிர்ச்சி அடைந்த போட்ஸ்வானா அரசு, யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்ட‌றியும் பணியில் வனஉயிரின மற்றும் தேசிய பூங்கா துறையை ஈடுபடுத்தியது. அவர்கள், உயிரிழந்த யானைகளின் உடல்களிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். நிலைமயை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், வனப்பகுதியின் மேலே விமானங்களில் சென்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், சயானோ எனப்படும் பக்டீரியாக்கள் உற்பத்தி செய்த நச்சுப்பொருள் கலந்த தண்ணீரைப் பருகியதால்தான் யானைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால் ‌நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரைப் பருகிய மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் யானைகள் மட்டும் உயிரிழந்தது எப்படி? என்கிற சந்தேகத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்று வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்கா துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள போட்ஸ்வானா, உலகிலேயே அதிக யானைகளைக் கொண்ட நாடாகும். அங்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55