பிரான்ஸின் நீஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில், ஐ.எஸ். தீவிரவாத குழுவிற்கு ஆதரவான குழுக்கள் அந்தத் தாக்குதல் படுகொலைகளை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களில் ஒன்றான 'பாரிஸ் மட்ச்' சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ள போதும் அந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் டெலிகிராம் இணையத்தளத்திலுள்ள ஐ.எஸ். தீவிரவாத குழுவிற்கு ஆதரவான ஊடகங்களில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் மேற்படி தாக்குதலைக் கொண்டாடும் வகையில் பிரான்ஸுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.